Wednesday, April 1, 2020

#PLEASE STAY HOME

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்தையும் ஆட்கொண்டுள்ளது.

வளர்ந்த நாடுகளிலேயே பல பாதிப்புகளும், மரணங்களும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அதிக சுகாதார வசதிகள் இல்லாத நாடாக இருக்கும் நம் நாட்டில் இக்கிருமி ஒரு சமுதாய தொற்றாக மாறினால் பல லட்ச உயிர்களை இழக்க நேரிடும்.

ஆகவேதான், நமது மத்திய, மாநில அரசாங்கங்கள் சமுதாய இடைவெளியை கடைபிடிக்க வேண்டி 21 நாள் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளது. ஆனால், இன்னும் பல இடங்களில் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் நடந்துக்கொள்கின்றனர்.













காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்ச்சதிரம் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில், " தம்பி அறக்கட்டளை (ம) காவல் துறை இணைந்து கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம்.  தங்கள் கிராமங்களையும், அதை சுற்றிய பகுதிகளையும் பாதுகாத்திட, தன்னார்வலர்களாக (VOLUNTEERS) வரவிரும்பும் இளைஞர்கள் , தம்பி அறக்கட்டளையை தொடர்புக்கொண்டு எங்களுடன் இணையலாம்.


மேலும், அடிப்படை பொருட்களான, உணவு, மருந்து, தண்ணீர் ஆகியவற்றை தவிர்த்து, மற்ற எவ்வித காரணத்திற்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என தம்பி அறக்கட்டளை சார்பாக அன்போடு கேட்டுகொள்கிறோம்.

#STAY HOME, SAVE LIVES 





0 comments:

Post a Comment

BTemplates.com

Powered by Blogger.

Facebook

Random Posts

Recent Posts

Header Ads

ad

Popular Posts

Blog Archive

Total Pageviews

Followers