தம்பி அறக்கட்டளையின் பார்வை (Vision):

                கண்ணியமான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் உள்ள சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருதல்.

தம்பி அறக்கட்டளையின் பணி (Mission):

                அனாதைகள், ஏழைகள் (ம) மாற்றுத் திறநாளிகள் ஆகியோரை மையாமாகக் கொண்டு, கண்ணியமான, ஆரோக்கியமான (ம) பாதுகாப்பான வாழ்கையை வாழ கல்வி ஆதரவையும், சிறப்பு கவனிப்பையும் வழங்குவதன் மூலம் சமூகத்தின் மாற்றத்தை நோக்கி நாங்கள் பணியாற்றுகிறோம்.

     குழந்தைகள், இளைஞர்கள் (ம) பெண்களுக்கு தேவையான  திறன்களை கற்பிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் கிராமங்களில் சமூக மேம்பாட்டு மையங்கள் அமைத்தல்.

     பெண்கள் (ம) இளையர்களை சிறிய அளவிலான வருமானம் ஈட்டும் திட்டங்களுக்கு உதவுவதன் மூலமும், வேலை வாய்ப்புகளைக் குறிப்பிடுவதன் மூலமும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தல்,

     கண் (ம) இரத்த தானத்தை ஊக்குவிக்க சமூகத்தில் வழக்கமாக விழிப்புணர்வு (ம) நன்கொடை முகாம்களை தொடர்ந்து நடத்துவது.

     சூரிய சக்தி பயன்பாடு, மரத்தோட்டம் (ம) பிற சுற்றுச் சூழல் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்வடுதுவதன் மூலம் சமூகத்தில் சுற்றுச்சூழல் சார்பு அணுகுமுறையை வளர்ப்பது.

முக்கிய மதிப்புகள் (Core Values):

             நேர்மை (Integrity):
               
தொழில்முறை நடத்தை (ம) நெறிமுறைகளின் மிக உயர்ந்த தரத்துடன் நாங்கள் சரியானதைச் செய்கிறோம்.

நாங்கள் வெளிப்படையான, நேர்மையான (ம) செய்யும் வேளையில் உறுதியாக இருக்கிறோம்.

      பரிவு (Compassion):

                பாதிக்கப்பட்ட மக்கள் (ம) சுற்றுச் சூழலுக்கான இரக்கத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். இது அவர்களை பலப்படுத்துகிறது (ம) வளர்க்கிறது.

      பங்கேற்ப்பு (Participation):

                நாங்கள் பணிப்புரியும் சமூதாய மக்களை மேம்படுத்த முயற்சிக்கிறோம்.
     நாங்கள், சேவை செய்யும் நபர்கள் (ம) எங்களுக்கு சேவை செய்ய உதவும் நபர்களின் முழு சேர்க்கை (ம) பங்கேற்ப்பை நாங்கள் தீவிரமாக ஆதரிக்கிறோம்.

     மரியாதை (Respect):
               
                நாங்கள் எல்லா மக்களின் கண்ணியத்தையும் மதிக்கிறோம். ஒவ்வொரு நபரையும் சமமாக பாவிக்கிறோம்.

  
     பாகுபாடற்ற சேவை (Non- Discrimination):


                ஒருவரது வர்க்கம், சாதி, மதம், பாலினம், தேசியம், இனம் (அ) மொழி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நாங்கள் மக்களுக்கு சேவை செய்கிறோம். 

0 comments:

Post a Comment

BTemplates.com

Powered by Blogger.

Facebook

Random Posts

Recent Posts

Header Ads

ad

Popular Posts

Blog Archive

Total Pageviews

Followers