தம்பி அறக்கட்டளை பயணிக்கும் பாதைகள்

1.       கல்வி
2.       மருத்துவம்
3.       சமூக விழிப்புணர்வுப் பிரச்சாரம்
4.       பசுமைபூமி துவக்கம்
5.       அரசாங்க திட்டங்கள் சார்ந்த விழிப்புணர்வு (ம) வழிவகை செய்தல்
6.       அடிப்படை தேவையை பூர்த்திசெய்தல் - உணவு
7.       அடிப்படை தேவையை பூர்த்திசெய்தல் - ஆடை

1

கல்வி ஆதரவு (Education Support)


1.      தேவைப்படும் மாணவர்களுக்கு நிதி, கல்வி மற்றும் ஆதரவு:

 மாணவர்களுக்கு தேவையான கல்வி, நிதி மற்றும் பொருள் ஆதரவு அளித்தல்.
 மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை தொடர மற்றும் அடைய தேவையான நிதி மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்.

2.      கிராமங்களில் சமூக மேம்பாட்டு மையங்கள் அமைத்தல்:

 கிராமங்களில் உள்ள ஏழை குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திரனாளிகள் பயனளிக்கும் வகையில் கிராமங்களில் சமூக மேம்பாட்டு மையங்களை அமைத்து அவர்களை மேம்படுத்துவதற்கு தேவையான மதிப்பு கூட்டு கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை வழங்குதல்.

3.      மதிப்புக்கூட்டு கல்வி (Value ED):

நாங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மதிக்கிறோம்.

குழந்தைகள் ஒவ்வொருவரும் சிறப்பிற்குரியவர்கள், பராமரிக்கப்பட வேண்டியவர்கள்.

கல்வியில்லாத குழந்தை, சிறகுகள் இல்லாத பறவை போன்றது. மதிப்புகள் இல்லாத கல்வி ஒழுக்கமும், நெறியும் இல்லாத வாழ்க்கை போன்றது.

இதனடிப்படையிலேயே தம்பி அறக்கட்டளை மதிப்பு கூட்டு கல்வியை மேற்கொள்கிறது.


4.       திறன் மேம்பாட்டுக் கல்வி (Skill Development Education)  :
கிராமங்களிலுள்ள பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திரனாளிகள் சிறு அளவிலான தொழில்கள் மற்றும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறோம்.
நாங்கள் பயிற்சி அளிக்கும் வருமானம் ஈட்டும் திட்டங்களில் மெழுகுவர்த்திகள் தயாரித்தல், சலவைத்தூள், காளான் சாகுபடி, ஒரு சிறிய கடை அமைத்தல் போன்றவை அடங்கும்.
ஒரு சமுதாயத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான இது ஒரு சிறிய நடைமுறைத் தீர்வு என்பதை நாங்கள் நம்புகிறோம்.

5.      பள்ளி கைவிடுதல்- மீட்பு முயற்சி
(School Dropout Recovery Initiative):

இந்த முயற்சியின் மூலம் நாங்கள் மிகவும் பின்தங்கிய சமூகத்தில் உள்ள மாணவர்களுடன் உரையாடல் அமர்வை நடத்தி பள்ளிகளுக்கு செல்லாததன் காரணங்களை கண்டுபிடித்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் செல்ல எங்கள் நடவடிக்கைகளை எடுக்கிறோம்.

தனிப்பட்ட ஆசிரியர்களின் கவனக் குறைவு,
கிராமப்புற மாணவர்களின் கற்றல் சவால்கள்,
முதன்மை மட்டத்தில் மோசமான கல்வி,

போன்றவை பள்ளிக் கல்வியை கைவிடுவதற்கு வழிவகுக்கின்றன என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.


6.      குழந்தைகள் படிக்க - முன்முயற்சி
(Kids Read- Initiative):

நல்ல கல்விக்கு எப்போதும் நல்ல அறிவு ஆதாரம் தேவை.
எங்கள் நோக்கம் என்னவென்றால், பெரும்பாலான குழந்தைகள் முதல் தலைமுறை கற்பவர்களாக இருப்பதால். அவர்கள் புத்தகங்களை வாசிப்பதற்கும், நேசிப்பதற்கும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பின்தங்கிய பகுதிகளில் இருப்பதால், அவர்களை சென்றடையாத பகுதிகளுக்கு தேவையான புத்தகங்களையும், ஆதரவுகளையும் நாங்கள் வழங்குகிறோம்.

7.      பொம்மை நூலகம் முன்முயற்சி
(Toy Library- Initiative):

உங்கள் குழந்தைகளின் பழைய பொம்மைகளுக்கு புதிய வாழ்க்கையை தந்து குறைந்த சலுகை பெற்ற குழந்தைகளுக்கு, ஒரு புன்னகையை கொண்டு வாருங்கள்.

நீங்கள் விரும்பினால் புதிய பொம்மைகளையும் தானம் செய்யலாம்.

8.      சமூக நூலகங்களை அமைத்தல் (Books Library).




2

மருத்துவ  ஆதரவு (Medical  Support)

1.      உடல் ஊனமுற்றோரின் பிசியோதேரப்பிக்கான நிதி உதவி.
(Financial Help For Physiotherapy For Specially abled):

உடல் ஊனமுற்றோரின் Physiotherapy () பிற மருத்துவத் தேவைகளுக்கான மாதந்திர நிதி உதவியை நாங்கள் வழங்குகிறோம்.

 

2.      பெரியவர்களுக்கான மருந்துகள் (ம) ஊட்டச்சத்துக்கான நிதி உதவி:

ஏழை பெரியவர்களுக்கு தேவையான மருந்துகள் (ம) ஊட்டச்சத்துக்கான மாதந்திர நிதி உதவியை நாங்கள் வழங்குகிறோம்.
.

3.      கிராமங்களில் மருத்துவ முகாம்கள் அமைத்தல் :
இந்த முயற்சியின் மூலம் உடல் ஊனமுற்றோர் (ம) மூத்த             குடிமக்களுக்கும் தரமான சுகாதார சேவையை பெறுகின்றனர்.


3
விழிப்புணர்வு பிரச்சாரம்


1.       கண் தான விழிப்புணர்வுப் பிரச்சாரம்
2.       இரத்ததான விழிப்புணர்வுப் பிரச்சாரம்
3.       மற்றும் பல

எங்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மூலம் மக்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
இது ஒரு உன்னத செயல் (ம) முற்றிலும் தன்னர்வமானது.


4
பசுமைபூமி – துவக்கம்

நாம் அன்னை பூமியின் ஒரு பகுதியாவோம்.
இந்த கிரகத்தை நோக்கி சமூகத்திற்கும், எதிர்கால சந்ததியினருக்கும் வாழ ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கு தம்பி அறக்கட்டளை ஒரு சிறிய நடவடிக்கைகளை எடுக்கிறது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, முதல் கட்டமாக 2019-20ம் ஆண்டில் 1000 மரக்கன்றுகளை நடவு செய்ய இலக்கு வைத்துள்ளோம்.
மரக்கன்றுகளை நன்கொடையாக அளிப்பதன் மூலமோ (அ) மரங்களை வளர்க்கக்கூடிய இடத்தை காண்பதன் மூலமோ (அ) இந்த முயற்சிக்கு உங்கள் நேரத்தை வழங்குவதன் மூலமோ எங்களுடன் கைகோருங்கள்.
இயற்கையை நோக்கிய உங்களின் இந்த சிறிய செயலின் பலன்களை சமூகமும், எதிர்கால தலைமுறையினரும் அனுபவிக்கட்டும்.

5
அரசாங்க திட்டங்கள் சார்ந்த விழிப்புணர்வு

அரசாங்க திட்டங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுதுகிறோம். அதை எளிதாக்குகிறோம்.
மக்களுக்கு, குறிப்பாக வறுமையில் வாடும் மக்களுக்கு பல நன்மைகளை பயக்கும் அரசாங்க திட்டங்கள் உள்ளன. அவர்கள் அதை அறியாதவர்கள்.
அதை பெறுவதற்கான வழிகாட்டுதலையும், ஆதரவையும் நாங்கள் வழங்குகிறோம்.


6

அடிப்படை தேவை - உணவு

அனாதை இல்லங்கள் (ம) சிறப்பு பராமரிப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு உணவு பரிசை வழங்குவதன் மூலம் உங்களின் பிறந்த நாள், ஆண்டுவிழாக்கள் (அ) எந்தவொரு சிறப்பு சந்தர்ப்பத்தையும் கொண்டாடுங்கள்.
ஒருநாள் மதிப்புள்ள உணவு /சிற்றுண்டிக்கான நிதியுதவி அளிப்பதன் மூலம், உங்கள் வாழ்கையின் ஒரு சிறப்பு நாள் வேறு ஒருவருக்கும் ஒரு சிறப்பு நாளாக இருக்கலாம்.



7
அடிப்படை தேவை – உடை

குழந்தைகள் (ம) பெரியவர்களுக்குப் பொருந்தக்கூடிய அனைத்து வகையான ஆடைகளையும் நாங்கள் சேகரிக்கிறோம்.
குறைந்த சலுகைகள் பெற்றவர்களுக்கு நீங்கள் அதை நன்கொடையாக வழங்கலாம்.
உங்களுடைய ஒரு சிறிய உதவி வறுமையிலுள்ள (ம) தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பாகவும் ஒரு வரமாகமும் இருக்கும்.
எங்களை நேரடியாகவோ (அ) தொடர்புகொண்டோ உங்களின் உதவியை மேற்கொள்ளலாம்.



0 comments:

Post a Comment

BTemplates.com

Powered by Blogger.

Facebook

Random Posts

Recent Posts

Header Ads

ad

Popular Posts

Blog Archive

Total Pageviews

Followers